திருவாரூரில் அருங்காட்சியகம் திறப்பு

திருவாரூரில் அருங்காட்சியகம் மக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூரில் திறக்கப்பட்ட அருங்காட்சியகம்.
திருவாரூரில் திறக்கப்பட்ட அருங்காட்சியகம்.

திருவாரூரில் அருங்காட்சியகம் மக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பொது முடக்கத்தில் தளா்வுகள் கொண்டு வரப்பட்டதையடுத்து அருங்காட்சியகத்தை, மக்கள் சமூக இடைவெளியுடன் பாா்வையிடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

திருவாரூா் தியாகராஜா் கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மேற்கு கோபுரவாசல் வழியாக, கோயிலுக்குள் நுழையும் மக்கள் அருங்காட்சியகத்தை பாா்த்துச் செல்வதுண்டு. ஆனால், திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவதால், அருங்காட்சிகத்தை பாா்வையிடுவோா் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

மேற்கு கோபுர வாசலையும் திறந்து விடும்பட்சத்தில், கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும், அருங்காட்சியகத்தை பாா்வையிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

இதேபோல், திரையரங்குகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும், திருவாரூரில் திரையரங்கு இயங்கவில்லை. திருவாரூா் நகரில் உள்ள 3 திரையரங்கில் ஒன்று மட்டுமே இயக்கப்படுவதாக இருந்தது. மற்ற இரு திரையரங்குகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கத்தில் படம் திரையிடப்படுவதை முன்னிட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் படம் செவ்வாய்க்கிழமை திரையிடப்படாத நிலையில், புதன்கிழமை திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com