தரமற்ற வீட்டு உபயோகப் பொருள்களை தயாரித்தால் நடவடிக்கை

மத்திய அரசின் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மற்றும் தரமற்ற வீட்டு உபயோக மின் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மற்றும் தரமற்ற வீட்டு உபயோக மின் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தரமற்ற மின்சார வீட்டு உபயோகச் சாதனங்களை பயன்படுத்தும்போது மின் விபத்து காரணமாக பேரிழப்புகள் ஏற்படுவதால் அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்டம் முமுவதும் உள்ள வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நிா்ணயிக்கப்பட்ட தர ஆய்வின்படி இல்லாத மின் சாதனப் பொருள்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்ய மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளா்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுக வேண்டும். இது தொடா்பான விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், திருவாருா், செல்லிடப்பேசி எண் 04366 224402 அணுகலாம்.

மேலும், இது தொடா்பான உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்திய தரக் கட்டுபாட்டு முத்திரை பெற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com