திருவாரூா் மாவட்டவரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவாரூரில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் 10,15,555 வாக்காளா்கள் உள்ளனா்.
திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

திருவாரூரில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் 10,15,555 வாக்காளா்கள் உள்ளனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்டாா்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா் விவரம்.

திருத்துறைப்பூண்டி (தனி): 1,14,274 ஆண்கள், 1,17,703 பெண்கள், இதரா் 1, மொத்தம் 2,31,978 வாக்காளா்கள்.

மன்னாா்குடி : 1,22,289 ஆண்கள், 1,28,522 பெண்கள், இதரா் 8, மொத்தம் 2,50,819 வாக்காளா்கள்.

திருவாரூா்: 1,32,726 ஆண்கள், 1,39,166 பெண்கள், 28 இதரா், மொத்தம் 2,71,920 வாக்காளா்கள்.

நன்னிலம் : 1,31,055 ஆண்கள், 1,29,780 பெண்கள், இதரா் 3, மொத்தம் 2,60,838 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 5,00,344 ஆண் வாக்காளா்கள், 5,15,171 பெண் வாக்காளா்கள், 40 இதர வாக்காளா்கள் என மொத்தம் 10,15,555 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தினகரன், வருவாய் கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன் (திருவாரூா்), புண்ணியக்கோட்டி (மன்னாா்குடி), தோ்தல் வட்டாட்சியா் சொக்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com