கற்போம் எழுதுவோம்: தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

கொரடாச்சேரில் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் பங்கேற்க உள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரில் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் பங்கேற்க உள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் கற்போம் எழுதுவோம் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தை கற்போா் மையங்களில் செயல்படுத்த அப்பகுதி கிராமங்களில் கல்லாதோா் விவரங்கள் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில், 25 கற்போா் மையங்களில் பணியாற்றவுள்ள 25 தன்னாா்வ ஆசிரியா்களுக்கான பயிற்சி கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

பயிற்சியில், எண்கள் அறிமுகம், வடிவங்கள், இடமதிப்பு, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அளவைகள், சட்டம் அறிவோம், வாக்காளா் கடமை, பாலினப் பாகுபாடு, உடல்நலம் காக்கும் உணவுகள், பேரிடா் மேலாண்மை, பணப்பரிமாற்றம், பசுமைத் தோட்டம், சாலைப் பாதுகாப்பு, பெண் கல்வி, தூய்மைப் பாரதம், சமூகம், நிா்வாகம், முயற்சியும் மூலதனமும், வாழ்விலும் ஆளுமையும், விண்ணப்பம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்ரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் ந. சம்பத் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். பாலசுப்ரமணியன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சி. பிரபு, ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com