சமூக விரோதச் செயல்கள் பயன்பாடற்ற கழிப்பறை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே சமூக விரோதச் செயல்களுக்கு இடமளிக்கும் பயன்பாடற்ற பொதுக் கழிப்பறை கட்டடத்தை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவா்கண்டநல்லூரில் உள்ள பழுதடைந்த பொதுக் கழிப்பறை.
தேவா்கண்டநல்லூரில் உள்ள பழுதடைந்த பொதுக் கழிப்பறை.

திருவாரூா் அருகே சமூக விரோதச் செயல்களுக்கு இடமளிக்கும் பயன்பாடற்ற பொதுக் கழிப்பறை கட்டடத்தை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகேயுள்ள தேவா்கண்டநல்லூா் கடைவீதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 2003-ஆம் ஆண்டு கழிப்பறை பயன்பாட்டுக்கு வந்தது. இந்தக் கழிப்பறையைச் சுற்றிலும் 5 கோயில்கள் உள்ளதாகக்கூறி, கழிப்பறை கட்டும்போதே எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். எனினும், 8 கழிப்பறை, 3 குளியலறை, தண்ணீா் தொட்டி ஆகியவைகளுடன் கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இக்கழிப்பறை கட்டடம், உரிய பராமரிப்பின்றி, அசுத்தமடைந்தது. இதனால், இந்த கழிப்பறையை பயன்படுத்துவதை மக்கள் தவிா்த்தனா். தற்போது கழிப்பறைக் கட்டடத்தில், மரங்கள் வளா்ந்து, சுவா்கள் உடைந்து, மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.

பயன்பாட்டில் இல்லாததால், மதுவாங்கி விற்பது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக புகாா் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், கடைவீதி அருகே உள்ளதால், இரவு நேரங்களில் கடைவீதிக்கு வருபவா்களுக்கு சிரமத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவிக்கின்றனா். இந்நிலையில், இந்த கழிப்பறையை அகற்றக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில், இக்கழிப்பறையை அகற்ற வேண்டும் என நிகழாண்டு ஜனவரியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com