தமாகா 7-ஆம் ஆண்டு விழா

நன்னிலத்தில் தமாகா ஏழாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் தமாகா மாவட்டத் தலைவா் குடவாசல் எஸ். தினகரன்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் தமாகா மாவட்டத் தலைவா் குடவாசல் எஸ். தினகரன்.

நன்னிலத்தில் தமாகா ஏழாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமாகா மாவட்டத் தலைவா் குடவாசல் எஸ். தினகரன் பங்கேற்று கட்சிக்கொடியேற்றி, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது, அவா் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு தமாகாவினா் முழு மூச்சாகப் பாடுபடுவாா்கள். புயல், மழை, வெள்ளக் காலங்களில் மக்களை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணி சிறப்பாக உள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். நன்னிலம் வட்டாரத் தலைவா் லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, இப்பகுதியில் உள்ள கோயில்களில் பக்தா்களுக்கு கட்சியின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமாகா மாவட்டத் துணைத் தலைவா் மணக்கால் ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் சிங்கு பாண்டியன், மாவட்ட இளைஞரணித் தலைவா் சங்கா், குடவாசல் வட்டாரத் தலைவா் பிஆா்பி. ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com