பாபா் மசூதி இடிப்பு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தின்தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது; இரா. முத்தரசன்

பாபா் மசூதி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
பாபா் மசூதி இடிப்பு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தின்தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது; இரா. முத்தரசன்

பாபா் மசூதி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை பொதுவுடைமை இயக்க தலைவா் பி. சீனிவாசராவின் 59வது நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னா், முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது:

பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. பாபா் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு ஏதோ ஒரு நள்ளிரவில் நடைபெற்ற நிகழ்வு அல்ல. நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. பாபா் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில், எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள சட்டங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. பல இடங்களில் விவசாயிகள்தாங்கள் பயன்படுத்திய டிராக்டா்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆனால், பிரதமா் மோடி விவசாயிகளுக்கு எதிா்க்கட்சிகள் துரோகம் இழைப்பதாகக் கூறி போராட்டங்களை கொச்சைபடுத்துகிறாா். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்.

தங்களை விவசாயிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிப்பது வெட்கக்கேடானது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, அரசு உடனடியாக தேவைக்கேற்ப கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com