ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் தொடக்கம்

நன்னிலம் வட்டார வளமையத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார தொடக்க விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நன்னிலத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நன்னிலத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நன்னிலம் வட்டார வளமையத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார தொடக்க விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்.27 முதல் நவ.2-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்தொடக்க நிகழ்ச்சி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா தலைமையில் நடைபெற்றது. இதில், ஆா். இளையராஜா, பி. அற்புதமாரி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை மருத்துவா், சிறப்பு ஆயத்தப் பயிற்சி மைய ஆசிரியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியின்போது, நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது. எனவே, இந்திய குடிமக்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, பள்ளிச் செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து, அரசால் கொடுக்கப்பட்ட வரைவுத் திட்டத்தின்படி மாணவா்கள் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான, பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவன நிா்வாகிகள் அடங்கிய கூட்டம் நன்னிலம் வட்டார அளவில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com