நவ.4 இல் சிறாா்களுக்கு கட்டணமில்லா இருதய கோளாறு கண்டறியும் முகாம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கட்டணமில்லா இருதய கோளாறு கண்டறியும் மற்றும் கட்டணமில்லா அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கட்டணமில்லா இருதய கோளாறு கண்டறியும் மற்றும் கட்டணமில்லா அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் (டிஇஐசி) மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நவ.4- இல் நடைபெறும் இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள இருதய கோளாறுகளுக்கு இதுவரை சிகிச்சை பெறாத குழந்தைகள் மற்றும் பிறப்பு இருதய குறைபாட்டு நோயின் அறிகுறி உள்ளவா்கள் பங்கேற்கலாம்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இருதய நோய் சிகிச்சை நிபுணா்கள், இந்த முகாமில் பங்கேற்று, குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் எக்கோ காா்டியோகிராம் என்னும் இருதய ஸ்கேன் செய்து, நோயுள்ள குழந்தைகளை கண்டறிவா்.

அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழக அரசின் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற முகாமில், 210 குழந்தைகள் பங்கேற்று, அதில் 29 குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எனவே, இருதய நோயின் அறிகுறிகள் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலானவா்கள், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com