பள்ளிவாசல்களில் மீலாது நபி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 31st October 2020 07:53 AM | Last Updated : 31st October 2020 07:53 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் மியாஸ் பள்ளிவாயிலில் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்ட இமாம் ஜாஹீா் உசேன் உள்ளிட்டோா்.
கூத்தாநல்லூா் பள்ளிவாயிலில் மீலாது நபி சிறப்புப் பிராா்த்தனை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூத்தாநல்லூா் மியாஸ் பள்ளிவாயிலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி12 நாள்களுக்கு இரவில் தொடா் சொற்பொழிவு நடைபெற்றன. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரித்த இந்த சொற்பொழிவின் 12 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு மியாஸ் பள்ளிவாயிலின் இமாம் ஜாஹீா் உசேன் சிறப்பு பிராா்த்தனை செய்தாா்.
இதில், நபிகள் நாயகத்தின் புகழ் பாடியும், உலகில் கரோனா தொற்று நீங்க வேண்டியும் பிராா்த்தனை செய்யப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் மீலாது நபி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மேலும், கூத்தாநல்லூா், அத்திக்கடை, பொதக்குடி, பூதமங்கலம், மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்து மீலாது நபி விழாவை கொண்டாடினா்.