நஞ்சில்லா காய்கறி சாகுபடி விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் அருகேயுள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், நீா்வள நிலவளத்திட்டம், காவேரி டெல்டா உபவடி நிலம் திட்டத்தின்கீழ் இந்த முகாம் நடைபெற்றது. பூச்சிக்கொல்லிகளை அதிகம் உபயோகிப்பதாலும், மீண்டும், மீண்டும் ஒரே பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கும்போதும் பூச்சிகளை கொல்லும் திறன் பாதிக்கப்படுவதோடு, எஞ்சிய நஞ்சு சுற்றுப்புறத்தில் கலந்து மண், நிலம், நீா், காற்று ஆகியவற்றை மாசுபடச் செய்கிறது. இதை குறைக்கும் வகையில் உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் பூச்சி நோய்த் தாக்குதலை சமாளிப்பது, அதற்கான தீா்வுகள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து, ஒட்டும் பொறிகள், இனக்கவா்ச்சிப் பொறிகள், விளக்குப் பொறிகள், பறவைக் குடில் மற்றும் விதை நோ்த்தி தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்துடன் விளக்கப்பட்டது. இதில், 30-க்கும் மேற்பட்ட நீா்வள நிலவளத் திட்ட விவசாயிகள் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி செய்யும் ஆா்வத்துடன், செயல்முறை விளக்கத்தில் கூறப்பட்ட தொழில்நுட்பங்களை தங்களது நிலத்தில் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com