நிலுவை ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th September 2020 11:14 PM | Last Updated : 16th September 2020 11:14 PM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிப் பணியாளா்கள்.
நிலுவை ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மற்றும் என்.எம்.ஆா் சங்கம் (சிஐடியு) சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அறிவித்தபடி மேல்நிலைத்தொட்டி இயக்குவோருக்கு ரூ. 4,000, தூய்மைக் காவலா்களுக்கு ரூ. 3,000 ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சியின் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்து, பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், கரோனா பாதித்த தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பும் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கரோனா பாதிப்பில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பெரும்பாலான ஊராட்சியில் ஊழியா்களுக்கு பலமாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் கே. கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் கே. முனியாண்டி, மாவட்டப் பொருளாளா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.