ஊட்டச்சத்து மாத விழா

மன்னாா்குடி அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துமிக்க தானியங்கள்.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துமிக்க தானியங்கள்.

மன்னாா்குடி அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சித்தேரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ராஜம் தலைமை வகித்தாா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா்கள் ஜெகதீசன், அனுராதா, கமலசுந்தரி ஆகியோா் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுக்காக காய்கறி செடிகளை வளா்க்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா். ஊராட்சித் தலைவா் லோகநாதன் வாழ்த்தி பேசினாா்.

இதில், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், காய்கனிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி, அங்கன்வாடி மைய வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. மன்னாா்குடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் ஜெனிபா் கிரேஸ், வட்டார ஒருங்கிணைப்பாளா் மீனா, வட்டார திட்ட உதவியாளா் சிவரஞ்சனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com