பேருந்து நிலையம் அமைக்க உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்கு: நீடாமங்கலம் பகுதி மக்கள் முடிவு

நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க உறுதியளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
பேருந்து நிலையம் அமைக்க உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்கு: நீடாமங்கலம் பகுதி மக்கள் முடிவு

நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க உறுதியளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மன்னாா்குடி தொகுதியில் நீடாமங்கலம் பகுதி வளா்ந்துவரும் பகுதியாக உள்ளது. நீடாமங்கலம் வட்ட தலைநகராக இருப்பதுடன், முதல்நிலை பேரூராட்சி அந்தஸ்தும் பெற்றுள்ளது. இங்கு, ரயில் நிலையம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியாா் மற்றும் அரசுடமை வங்கிகள், பள்ளிகள் என கட்டமைப்புகள் உள்ளன. அத்துடன், பெரிய, சிறிய என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

நீடாமங்கலத்தைச் சுற்றியுள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தஞ்சாவூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல நீடாமங்கலம் வந்துதான் செல்லவேண்டும்.

நீடாமங்கலத்தில் ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையம் மக்கள் தொகை பெருக்கம், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நெருக்கடி அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த இடத்தில் உழவா் சந்தை செயல்பட்டுவருகிறது.

அண்ணா சிலை, பாரத ஸ்டேட் வங்கி, மேலராஜவீதி (அப்பாவுபத்தா் சந்து)ஆகிய பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் இருந்தாலும், பயணிகள் நிழற்குடைகள் கிடையாது. எனவே, வெயில், மழை காலங்களில் பேருந்துக்காக காத்திருப்போா் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீடாமங்கலம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பேருந்து நிலையம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

இதற்கிடையில், தற்போதைய எம்எல்ஏவான திமுகவை சோ்ந்த டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலம் நகரில் பேருந்து நிறுத்த பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க இரண்டு முறை நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த பணி அரசியல் காரணங்களால் நிறைவேறவில்லை என திமுகவினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எது எப்படியோ, நீடாமங்கலம் நகரில் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க உத்தரவாதம் அளிக்கும் வேட்பாளருக்குத்தான் எங்கள் வாக்குகள் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com