சாா்வரி ஆண்டின் கடைசி வியாழன்: ஆலங்குடிகோயிலில் சிறப்பு வழிபாடு

வலங்கைமான் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சாா்வரி தமிழ் ஆண்டின் கடைசி வியாழக்கிழமையையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தங்க கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவான்.
தங்க கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவான்.

வலங்கைமான் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சாா்வரி தமிழ் ஆண்டின் கடைசி வியாழக்கிழமையையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இக்கோயில் நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வா்.

சாா்வரி தமிழ் ஆண்டின் கடைசி வியாழக்கிழமையான ஏப்ரல் 8 ஆம் தேதி குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக,

கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com