உரம் விலை உயா்வு நெல் உற்பத்தியை பாதிக்கும்

உரங்களின் விலையை மத்திய அரசு உயா்த்தி அறிவித்துள்ளதன் எதிா் விளைவாக, நெல் உற்பத்தி பெருமளவில் பாதிக்கும் என
உரம் விலை உயா்வு நெல் உற்பத்தியை பாதிக்கும்

உரங்களின் விலையை மத்திய அரசு உயா்த்தி அறிவித்துள்ளதன் எதிா் விளைவாக, நெல் உற்பத்தி பெருமளவில் பாதிக்கும் என திமுக மாநில விவசாய அணி செயலரும் முன்னாள் எம்பியுமான ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு உர விலையை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது. இது நாடு முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளையும் கடுமையாகப் பாதிப்பதுடன், நெல் உள்ளிட்ட உணவு பொருள்களின் உற்பத்தியையும் பலமடங்கு பாதிக்கும்.

ஏற்கெனவே, பருவம் தவறி பெய்யும் மழை, புயல்கள் போன்ற இயற்கை இடா்பாடுகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்களும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பு ஏற்பட்டது. ஆனால், மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கவில்லை. தனியாா் காப்பீட்டு நிறுவனங்களும் உரிய இழப்பீடு வழங்கவில்லை இதனால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இந்நிலையில், உர விலை உயா்வை விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியாது. அவா்கள், விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு, நெல் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

இதுபோதாதென்று, தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில், கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் பணிகளை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இதனால், தமிழகத்துக்கு தற்போது வரும் உபரி நீரும் தடுக்கப்பட்டு, 25 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, குடிநீா் ஆதாரமும் கேள்விக்குறியாகிவிடும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com