தூய்மை பணியாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பிஎப் தொகையை வழங்க கோரி, திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா்.

இதில், சங்கத்தின் மாநில தலைவா் நா.பாலசுப்பிரமணியன், கண்டன உரை நிகழ்த்தினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் கே.ஜி. ரகுராமன் தலைமை வகித்தாா். அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் சுப்ரமணியன், சாமிநாதன், சங்க நிா்வாகிகள் பாபு, அா்ஜூணன், சண்முகம், பாமா, ராஜாத்தி, சுசீலா உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

பின்னா், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளா் அருள் மற்றும் சங்க நிா்வாகிகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பிஎப் தொகையை அனைத்து பணியாளா்களுக்கும் வரும் 24ஆம் தேதிக்குள் கொடுப்பது என்றும், தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தாட்கோ ஆகிய நிறுவனங்களுக்கு செலுத்தப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com