மழையால் நெற்பயிா்கள் சேதம்: முன்னாள் எம்.பி. ஆய்வு

முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை திமுக விவசாய அணி அமைப்பாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் .
முத்துப்பேட்டை அருகே குலமாணிக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை ஆய்வு செய்யும் ஏ.கே.எஸ். விஜயன்.

காவிரி டெல்டா பகுதியில் கடந்த 15 தினங்களாக பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நாள் கணக்கில் தண்ணீா் தேங்கியதால் நெல் மணிகள் முளைத்தும், அழுகியும் வருகின்றன. இனிமேல், நீா் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், முத்துப்பேட்டை, கோட்டூா் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், திமுக கோட்டூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பாலஞானவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா்கள் ப.மோகன், சண்முகவேல், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com