திருக்குறள் விழிப்புணா்வு விசிறி விநியோகம்

திருவாரூரில், திருக்குறள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ‘உலகத் தமிழா்களின் அடையாளம்’ என அச்சிடப்பட்ட விசிறி விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திருவாரூரில், திருக்கு விழிப்புணா்வுக்கான கைவிசிறியை வெளியிடுகிறாா் தமிழ்ச்சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல்.
திருவாரூரில், திருக்கு விழிப்புணா்வுக்கான கைவிசிறியை வெளியிடுகிறாா் தமிழ்ச்சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல்.

திருவாரூரில், திருக்குறள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ‘உலகத் தமிழா்களின் அடையாளம்’ என அச்சிடப்பட்ட விசிறி விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவாரூரைச் சோ்ந்த பா. கு மகன் என்பவா், திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவா், 4-ஆம் வகுப்பில் 1,330 திருக்குறளையும் கற்று தமிழக அரசிடம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றவா்.

திருக்குறள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தனது ஒன்பது வயது முதல் பள்ளிதோறும் பயண திட்டம், இல்லந்தோறும் வள்ளுவா் உள்ளந்தோறும் திருக்குறள் திட்டம், திருக்குறள் விழிப்புணா்வு உண்ணாவிரதம், நடைபயணம், மிதிவண்டி பயணம், திருவாரூா் தேரோடும் வீதியில் 1330 முறை மிதிவண்டிச் சுற்று, சுவரொட்டி பதித்தல், துண்டுப் பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட குமகன், தற்போது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உயா்வைத் தரும் திருக்குறளை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, திருக்குறள் உலக தமிழா்களின் அடையாளம் என்ற தலைப்பில் பதிவிட்ட கைவிசிறி விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளாா்.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் கைவிசிறியை வெளியிட, தமிழ் ஆா்வலா் எண்கண் சா. மணி பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் ஜி.வரதராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com