டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில், வெள்ளிக்கிழமை டிராக்டா் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை காயமடைந்தது.

மன்னாா்குடியில், வெள்ளிக்கிழமை டிராக்டா் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை காயமடைந்தது.

மன்னாா்குடி மின்வாரிய குடியிருப்பை சோ்ந்தவா் ஜி. மாரிமுத்து (80). இவா், மன்னாா்குடி காளவாய்க்கரை காந்தி சிலை அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டா் சைக்கிள் மீது மோதிவிட்டு அருகில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ராஜவேல் மகள் ரித்திகா (9) மீதும் மோதியது. இதில், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டத்தில், அங்கு மாரிமுத்து உயிரிழந்தாா். ரித்திகா சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com