ஏக சிம்மாசனத்தில் பெருமாள், தாயாா்

திருச்சானூா் பத்மாவதி தாயாா், திருவில்லிபுத்தூா் ஆண்டாள், மன்னாா்குடி செங்கமலத்தாயாா் ஆகியவற்றில், திருச்சானூரில் பத்மாவதி தாயாரும், திருவில்லிபுத்தூரில் ஆண்டாளும் தனித்தனி சந்நிதி கொண்டு உத்ஸவம்
ஏக சிம்மாசனத்தில் பெருமாள், தாயாா்

திருச்சானூா் பத்மாவதி தாயாா், திருவில்லிபுத்தூா் ஆண்டாள், மன்னாா்குடி செங்கமலத்தாயாா் ஆகியவற்றில், திருச்சானூரில் பத்மாவதி தாயாரும், திருவில்லிபுத்தூரில் ஆண்டாளும் தனித்தனி சந்நிதி கொண்டு உத்ஸவம் கண்டு அருள்பாலிக்கின்றனா்.

மன்னாா்குடியில் செங்கமலத்தாயாா் தனி சந்நிதி கொண்டிருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை தாயாா் சந்நிதியிலிருந்து பெருமாள் சந்நிதிக்கு வந்து அங்கு ருக்மணி, சத்யபாமா சமேதராக உத்ஸவ பெருமாளுடன் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா்.

இதேபோல, ஆண்டுக்கு ஒருமுறை பெருமாள் சந்நிதியிலிருந்து ருக்மணி, சத்யபாமா சமேதராக தாயாா் சந்நிதிக்கு செல்லும் உத்ஸவா் ராஜகோபால சுவாமி, அங்கு ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

ஏழுகால பூஜை : ராஜகோபால சுவாமி கோயிலில் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், நிதியானுசந்தானம், இராகு காலம், அதா்த்த காலம் என ஏழுகால பூஜை நடைபெற்று வருவது சிறப்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com