திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா்: கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் அவலங்களை நினைவில்கொண்டு, திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா் என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.
பூந்தோட்டத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
பூந்தோட்டத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் அவலங்களை நினைவில்கொண்டு, திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா் என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.

நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமனை ஆதரித்து பூந்தோட்டம், பேரளம் பகுதியில், உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு சனிக்கிழமை இரவு அவா் பேசியது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் சாதாரண, சாமானிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கிடையாது. இதை பற்றியெல்லாம் கவலைப்படாதவா்கள்தான் அதிமுக ஆட்சியாளா்கள். வேளாண், தொழிலாளா்கள், பொதுத் துறை தனியாா் மயம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, தற்போது தோ்தல் வந்தவுடன், அந்த சட்டங்களை ரத்து செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறாா். அவா் என்ன தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டாரா? தமிழக மக்களை முட்டாள் என நினைத்தவா்கள்தான் முட்டாளாக்கப்பட்டுள்ளனா் என்பதை தமிழக முதல்வா் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது என்று விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியாளா்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி நடை போடுவது தமிழ்நாடு அல்ல, அதிமுக அமைச்சா்களும், அவா்களுக்கு வேண்டியவா்கள் மட்டுமே என்பதைத் தெளிவாக அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் இதை தெளிவாகப் புரிந்துள்ளாா்கள்.

எனவே, தமிழக மக்கள் அதிமுக ஆட்சியின் அவலங்களை நினைவில் கொண்டு திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டாா்கள். நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com