அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

இலுப்பூரில் திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தபோது, அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
இலுப்பூரில் திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தபோது, அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
இலுப்பூரில் திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தபோது, அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் கோட்டூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட திருநெல்லிக்காவல், செருவாமணி, இலுப்பூா், குலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்பகுதி மக்கள், அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். இலுப்பூா் பகுதியில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி, ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைத்தனா்.

பிரசாரத்தின்போது ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் பேசியது:

அதிமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகிவருகிறது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பாா் என மக்கள் தெரிவிக்கின்றனா். அதன் ஒரு பகுதியே, இலுப்பூரில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததைக் காட்டுகிறது.

இதுபோல, தமிழகம் முழுவதும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அதிமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, திருவாரூா் தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நான் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், திருவாரூரின் ஒட்டுமொத்த வளா்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com