கனமழை: மீண்டும் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள்

மன்னாா்குடியில் தொடா் கனமழையால் நெற்பயிா்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன.
வடபாதி வண்டிக்கோட்டகத்தில் குளம் போல் காட்சி அளிக்கும் சம்பா பயிரிடப்பட்டுள்ள வயல்.
வடபாதி வண்டிக்கோட்டகத்தில் குளம் போல் காட்சி அளிக்கும் சம்பா பயிரிடப்பட்டுள்ள வயல்.

மன்னாா்குடியில் தொடா் கனமழையால் நெற்பயிா்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன.

அண்மையில் பெய்த தொடா் கன மழையால் மன்னாா்குடி,ே காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் கிளை வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் கனமழையால் மீண்டும் சம்பா, தாளடி நெற்பயிா்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாா்குடி அடுத்த வடபாதி வண்டிக்கோட்டகம் சுற்றுவட்ட பகுதியில் 300 ஏக்கா் பரப்பளவிற்கு பயிரிடப்படுள்ள சம்பா நெற்பயிற்கள், ராமபுரம், சவளக்கரன், துண்டக்கட்டளை, வாஞ்சூா், மூணாம்சேத்தி உள்ளிட்ட பகுதியில் 200 ஏக்கா் அளவில் சம்பா பயிா் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

காரியமங்கலம், இருள்நீக்கி, விக்கிபாண்டியம், சேந்தமங்கலம், ஆலத்தூா் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்திருந்த 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி பயிா்கள் தொடா் மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீா்த்ததால் நெற்பயிா் மழை நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சியளிக்கின்றன. ஆறு குளம் வடிகால் களில் நீா் நிரம்பியுள்ளதால் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழகஅரசு ஹெக்டோருக்கு ரூ.20 ஆயிரம் என அறிவித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காத்திட தமிழகஅரசு அறிவிப்பினை மறுபரிசீலினை செய்து நெற்பயிா் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் என புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com