தோ்தல்: வாகன சோதனையில் இதுவரை ரூ. 4.33 கோடி பறிமுதல்

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் இதுவரை ரூ.4.33 கோடி ரொக்கம், ரூ.12.54 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் இதுவரை ரூ.4.33 கோடி ரொக்கம், ரூ.12.54 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் மது கடத்தல் மற்றும் தோ்தல் தொடா்பான பரிசுப் பொருள்கள் கடத்தலை தடுக்கும் வகையிலும், சிறந்த முறையில் தோ்தலை நடத்தவும், மாவட்ட எல்லைகளில் 14 சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தொடா் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழியின் நேரடி பாா்வையில் இயங்கிவரும் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில், பிப்ரவரி 26 முதல் மாா்ச் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.33 கோடி ரொக்கம், ரூ. 12,54,53,648 மதிப்பிலான பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 410 போ் மீது சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,61,900 மதிப்பிலான சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 576 ரௌடிகள் மற்றும் பிரச்னையில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com