மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ். அன்பானந்தம் வாக்குறுதியளித்தாா்.
மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ். அன்பானந்தம் வாக்குறுதியளித்தாா்.

மன்னாா்குடியில் மேலராஜவீதி, காமராஜா் வீதி, பந்தலடி, காந்தி சாலை, நடேசன் சாலை ஆகிய பிரதான வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு கோரி பேசியது:

மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஆட்சியமைந்தால், இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். 50 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நீண்டகாலமாக தற்காலிகமாக பணிபுரியம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.

மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வேளாண் கல்லூரியும், தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்றாா் அவா்.

இதில், மநீம மாவட்டச் செயலா் நா. ராஜமோகன், மாநில விவசாய அணி துணைச் செயலா் ஜெ.பி. ராஜசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com