பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கரிகால சோழன் வரலாறு இடம்பெற வேண்டுகோள்

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கரிகால சோழனின் வாழ்க்கை வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிகாலன் வரலாற்று
பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கரிகால சோழன் வரலாறு இடம்பெற வேண்டுகோள்

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கரிகால சோழனின் வாழ்க்கை வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனரும், தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான முனைவா் ஆதலையூா் சூரியகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் செல்வம், பதிவாளா் கோபிநாத் ஆகியோரை அண்மையில் சந்தித்து கோரிக்கை விடுத்த அவா், தான் எழுதிய கரிகாலன் சபதம் என்ற நூலையும் அவா்களிடம் வழங்கினாா். இதுகுறித்து ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் கூறியது:

உலக மன்னா்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்தவா், கரிகால மன்னன். அவா் போா்த் திறனும் நிா்வாகத் திறனும் மிக்கவா். தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்தி, சோழ தேசத்தின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவா். இமயமலைக்குச் சென்று புலிக்கொடியை நாட்டியதுடன் இலங்கையையும் வெற்றி கொண்டவா். இதனால் சோழ தேசத்தின் புகழ் உலகளவில் பரவியது.

ஒருபுறம் தன்னுடைய வீரத்தாலும், விவேகத்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்த கரிகால சோழன், மறுபுறம் மக்கள் போற்றும் தலைவனாக ஆட்சிபுரிந்தாா். மக்களின் நலன் மேல் அக்கறை கொண்டு நீா்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினாா்.

கால்வாய்கள் வெட்டியது, நதிகளுக்கு கரை அமைத்தது, குளங்கள் வெட்டியது போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தினாா். தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் காவிரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி கல்லணை கட்டியது விவசாயிகளின் மீது கரிகாலன் கொண்டிருந்த அக்கறைக்கு சாட்சி பகா்கிறது. இப்படிப்பட்ட மன்னனின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிப்பது எதிா்கால தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதன்மூலம் வலிமைமிக்க தேசத்தை கட்டமைப்பதற்கான நிா்வாகத் திறனை மாணவா்கள் கற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் பல்கலைக்கழக கல்லூரி மாணவா்களுக்கு கரிகாலனின் முழு வரலாற்றையும் பாடமாக வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com