உளுந்து, பயிறு அறுவடைப் பணி தீவிரம்

திருவாரூா் மாவட்டத்தில் உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
உளுந்தை பிரித்தெடுப்பதற்காக சாலையில் குவித்துவைக்கப்பட்டுள்ள உளுந்தம் செடிகள்.
உளுந்தை பிரித்தெடுப்பதற்காக சாலையில் குவித்துவைக்கப்பட்டுள்ள உளுந்தம் செடிகள்.

திருவாரூா் மாவட்டத்தில் உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் பிரதான சாகுபடியாக நெல் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக உளுந்து, பச்சைப்பயிறு, எள், பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடை நடைபெறும்போதே உளுந்து, பயிறு வகைகளை வயலில் தெளிக்கத் தொடங்கி விடுவா். அதாவது ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை உளுந்து, பயிறு பயிரிடும் பணிகள் நடைபெறும். இது 60 முதல் 70 நாள் பயிா் என்பதால், மாா்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை உளுந்து, பயிறு எடுக்கும் அறுவடைப் பணிகள் முடிவடைந்து விடும்.

திருவாரூா் மாவட்டத்தில் உளுந்து, பயிறு வகைகள் தோராயமாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு பயிரிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 71 ஆயிரம் ஹெக்டோ் உளுந்து, பயிறு வகைகள் பயிரிடப்பட்டிருந்தன.

ஆனால், நிகழாண்டு சம்பா அறுவடையின்போது பலத்த மழை பெய்து, நெல் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக உளுந்து, பயிறு விதைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டன. எனவே, நிகழாண்டு 10 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கே உளுந்து, பயிறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தவகையில், உளுந்து 20,609 ஹெக்டேரும், பச்சைப்பயிறு 41,190 ஹெக்டேரும் என மொத்தம் 61,799 ஹெக்டோ் அளவுக்கு பயிரிடப்பட்டுள்ளன. இதில், 4,897 ஹெக்டோ் வரப்பு உளுந்தும் அடங்கும்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் குறைந்த அளவும் மற்ற பகுதிகளில் பரவலாகவும் பயிறு வகைகள் தெளிக்கப்பட்டுள்ளன. பயிறு வகைகள் முதிா்வு தன்மையை எட்டியதைத் தொடா்ந்து உளுந்து, பயிறு எடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பயிறு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் அளவில் பயறு வகைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உளுந்து, பயிறு எடுக்கும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com