பள்ளி மாணவா்களுக்கான சுற்றுச்சூழல் இணையவழி கட்டுரைப் போட்டி

நன்னிலம் வட்டாரத்துக்குள்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன் குறித்த இணையவழி கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்கான சுற்றுச்சூழல் இணையவழி கட்டுரைப் போட்டி

நன்னிலம் வட்டாரத்துக்குள்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன் குறித்த இணையவழி கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே தனிப்பட்ட வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு சுற்றுச்சூழல், பல்லுயிா், காலநிலை மற்றும் உள்ளூா் சூழல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வையும், ஆா்வத்தையும் மேம்படுத்துவதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில், இணையவழியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

பூந்தோட்டம் குறுவள மையத்தில் இருந்து மாணவா்கள் பங்குபெற்ற இணையவழி கட்டுரைப் போட்டியை திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி ஆய்வு செய்தாா். இந்த மையத்தில் கோயில்திருமாளம், செறுவலூா், மகாராஜபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு எனது கனவு பள்ளி, எனது கனவு நூலகம் எனும் தலைப்புகளில் கட்டுரை போட்டி நடைபெற்றது.

9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்குப் பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் பந்தமாணிக்கம் தலைமையில் போட்டி நடைபெற்றது. நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கிடையேயான போட்டியில், கோயில்திருமாளம் பள்ளி முதல் பரிசும், செறுவலூா் பள்ளி 2-ஆம் பரிசும், மகாராஜபுரம் பள்ளி 3-ஆம் பரிசும் பெற்றது.

இதேபோல, அச்சுதமங்கலம், ஆனைக்குப்பம், பணங்குடி, பூந்தோட்டம், பேரளம், கடுவங்குடி, நெடுங்குளம் ஆகிய அரசு பள்ளிகளிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, ஆசிரியா் பயிற்றுநா் இளையராஜா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு வேறொரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் பரிசாக செல்லிடப்பேசியும், 2-ஆம் பரிசாக அறிவியல் கால்குலேட்டரும் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com