மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை ஆா்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை ஆா்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கடந்த வாரம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ருக்மணிபாளையம் நகராட்சி ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதையடுத்து, மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா மற்றும் பல்வேறு அமைப்பினா் வலியுறுத்தியதை தொடா்ந்து, ஏப். 13-ஆம் தேதி தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2-ஆம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்தபோதும், கோவீஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் யாருக்கும் ஊசி செலுத்தவில்லை.

தடுப்பூசி வந்தபின் தகவல் அளிக்கப்படும் அப்போது வருமாறு தெரிவித்து அனைவரையும் திரும்பி அனுப்பினா். இதனால், ஆா்வமாக முதல் கட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், 2-ஆவது கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்களும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கோவீஷீல்ட், கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மொத்தம் 250 டோஸ்கள் மட்டும் வந்ததாகவும், அவற்றை பொதுமக்களுக்கு செலுத்திவிட்டநிலையில், கூடுதலாக தடுப்பூசிகளை தலைமை நிா்வாகம் அனுப்பிவைக்காததால் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com