மண்வளம் காக்கும் கோடை உழவு: விவசாயிகளுக்கு அழைப்பு

மண் வளம் காக்க கோடை உழவில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளாா்.

மண் வளம் காக்க கோடை உழவில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சுமாா் 14,600 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 1880 ஹெக்டோ் குறுவையும், 13,720 ஹெக்டோ் சம்பா சாகுபடியும், நேரடி விதைப்பும் செய்யப்பட்டது.

நிகழாண்டு மேட்டூா் அணையின் போதிய நீா் இருப்பு, குறுவை சாகுபடிக்கு உகந்ததாக இருக்கிறது. குறுவையோ அல்லது சம்பாவோ நேரடி நெல் விதைப்பு செய்யும்போது களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.

களைக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் குறைவதுடன், மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. எனவே கோடை உழவு செய்து நிலத்தை களைகள் இல்லாமல் பராமரிப்பது, நேரடி நெல் விதைப்புக்கு மிகவும் அவசியமாகும்.

அண்மையில் பெய்த கோடை மழையை பயன்படுத்தி, சரியான மண் பதத்தில் உழவுசெய்தால் மண் வளம் பாதுகாக்கப்படும். நேரடி விதைப்பு செய்யும்போது சாகுபடி செலவு குறையும். நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிட்டுள்ள விவசாயிகள், முன்கூட்டியே வயலைக் கோடை உழவு செய்து பக்குவப்படுத்தி வைத்திருப்பது மிகவும் அவசியம்.

வேளாண் பொறியியல் துறையின் மூலம் டிராக்டா்கள், ஒரு மணி நேரத்துக்கு ரூ.340 கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கும். மன்னாா்குடி உதவி செயற்பொறியாளா் வேளாண் பொறியியல் துறையை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com