முழு பொது முடக்கம் கடைவீதியில் கூடிய மக்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் கடைவீதியில் சனிக்கிழமை திரளான கூட்டம் காணப்பட்டது.
முழு பொது முடக்கம் கடைவீதியில் கூடிய மக்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் கடைவீதியில் சனிக்கிழமை திரளான கூட்டம் காணப்பட்டது.

கரோனா 2-ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மீறுவோா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், சாலைகளில் யாரும் நடமாடக் கூடாது என அறிவிக்கப்பட்டு, அதைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கனி, மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு திருவாரூா் கடைவீதியில் ஏராளமானோா் சனிக்கிழமை திரண்டனா். வெயிலின் அளவும் சற்று குறைந்திருந்ததால், கடைவீதிகளில் அதிகமான மக்களை காண முடிந்தது. இதனால், கடைவீதிகளுக்கு வந்த இரண்டு சக்கர வாகனங்கள், எளிதாக செல்ல முடியாமல் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அரசின் எச்சரிக்கை காரணமாக, கடைவீதிக்கு வந்திருந்த மக்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருந்தனா். ஒரு சிலா் முகக்கவசம் அணியாமலும் கடைவீதியில் உலாவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com