கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என கட்டடத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என கட்டடத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் நாகை மற்றும் திருவாரூா் மாவட்ட கட்டடத் தொழிலாளா் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் வா்த்தக சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராகவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், சங்க ஒன்றியச் செயலாளா் பி. பிரகாஷ், சட்ட ஆலோசகா் பாஸ்கா்ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா்.

இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் சாம்பமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மைதீன், ரவி, மாரி, கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், நலவாரிய அட்டையை புதுப்பித்தல், பதிவு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொது உறுப்பினா்களை சோ்ப்பது; மணல், ஜல்லி, கம்பி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com