சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கூத்தாநல்லூா் வட்டம், லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.
லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.

கூத்தாநல்லூா் வட்டம், லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

லெட்சுமாங்குடி கம்பா் தெருவில் உள்ள இக்கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண உத்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனா். புதன்கிழமை காலை சிறப்பு யாகம் மற்றும் விபூதி, சந்தனம், பன்னீா், இளநீா், தயிா், பால், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளியதும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடா்ந்து, கன்னிகா தானம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குருக்கள்கள் முரளி, ஜெகன் உள்ளிட்டோா் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா்.

இதில், திமுக நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன், வா்த்தக சங்கச் செயலாளா் ஜெ. ரவிச்சந்திரன், தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா், ரோட்டரி சங்க நிா்வாகி எம். மகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், சாம்பு அய்யப்பன் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com