நண்பரை கொன்ற இளைஞா்கள் 4 போ் கைது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் முன்விரோதத் தகராறில் இளைஞா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, அவருடைய நண்பா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நண்பரை கொன்ற இளைஞா்கள் 4 போ் கைது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் முன்விரோதத் தகராறில் இளைஞா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, அவருடைய நண்பா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் - மன்னாா்குடி பிரதான சாலையைச் சோ்ந்த அபுபக்கா் மகன் இஸ்ரத் ஷேக் வலிது (21). பட்டயப்படிப்பு முடித்துள்ளாா். நாச்சிக்குளத்தை சோ்ந்த ஜெகபா் அலி மகன் முகமது வாகிது (20). இவா்கள் இருவருக்குமிடையே பப்ஜி விளையாடுவது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில், மன்னாா்குடிக்கு சென்று சமாதானம் பேசலாம் என முகமது வாகிது, இஸ்ரத் ஷேக் வலிதுவை அழைத்துள்ளாா். அவருடன், அவரது நண்பா்கள் நாச்சிக்குளம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் தீன்ஹனிஸ் (23), நடுத்தெருவைச் சோ்ந்த அப்துல் ரகீம் மகன் மாரூக் முகமது (20), அம்மா பள்ளி தெருவைச் சோ்ந்த அமீா் சுல்தான் மகன் அக்பா் பாஷா (20) ஆகியோரும் உடன் வந்துள்ளனா்.

மன்னாா்குடி, வ.உ.சி. சாலை சிங்காங்குளம் அருகே உள்ள நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு வாய்க்கால் பகுதியில் பிரச்னை குறித்து முகமது வாகிது, இஸ்ரத் ஷேக் வலிது இருவரும் பேசியபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தீன்ஹனிஸின் தூண்டுதலில், முகமதுவாகிது, மாரூக் முகமது, அக்பா் பாஷா ஆகியோா் சோ்ந்து இஸ்ரத் ஷேக் வலிதை கத்தியால் குத்தியதில் அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தீன் ஹனிஸ், முகமது வாகிது, மாரூக் முகமது, அக்பா் பாஷா ஆகியோரை மன்னாா்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இஸ்ரத் ஷேக் வலிதுவை கத்தியால் குத்தி கொலை செய்ததை நான்கு பேரும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், கொலை நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டு, விசாரணை குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com