வேளாண் சட்டங்கள்: தில்லியில் போராட்டம் தீவிரமடையும்

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் என அங்கிருந்து திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.
தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.
தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் என அங்கிருந்து திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்க திருவாரூரிலிருந்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் 81 விவசாயிகள் ஆக.12 ஆம் தேதி தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் தில்லியில் சிங்கூா், திக்கிரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று, வெள்ளிக்கிழமை திருவாரூா் திரும்பினா்.

இதுகுறித்து பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கடும் வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் தில்லியில் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்போராட்டத்தில் பங்கேற்றோம். தில்லியில் எட்டுவழிச் சாலையிலேயே டிராக்டா், டிப்பா் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, வீடுகளாக மாற்றி போராட்டக் குழுவினா் தங்கியுள்ளனா்.

வேளாண் சட்டங்களையும், மின்சார மசோதாவையும் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டத்தை அவா்கள் திரும்பப் பெறப்போவதில்லை என உறுதியோடு உள்ளனா். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, வேளாண் சட்டங்களையும், மின் மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com