அம்மன் கோயில்களில் ஆவணி ஞாயிறு வழிபாடு
By DIN | Published On : 22nd August 2021 10:56 PM | Last Updated : 22nd August 2021 10:56 PM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நீடாமங்கலம் முச்சந்திஅம்மன் கோயிலில் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கஞ்சிவாா்க்கப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கிராமப் புறங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் மற்றும் கஞ்சிவாா்ப்பு நடைபெற்றது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்த வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.