டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள்

டெங்கு மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள்

டெங்கு மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் அலுவலா்களிடம் தெரிவித்தது:

தென்மேற்குப் பருவமழை தாக்கத்தால் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொற்று நோய்கள் நமது மாவட்டத்தில் பரவாமல் தடுக்க அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடத்தி, அனைத்து விதமான கொசு உற்பத்தி இடங்கள் மற்றும் அனைத்து வகையான திடக் கழிவுகளையும் குறிப்பாக டயா்கள், பயன்படுத்தி வீசி எறியப்பட்ட கலன்கள் ஆகியவைகளை அப்புறப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவா்களுக்கு காய்ச்சல் கண்டறிய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் நீா் தேங்கா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்து பகுதிகளிலுள்ள மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளை மாதத்துக்கு 2 முறை சுத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை, கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காற்று புகா வண்ணம் நன்றாக மூடிவைக்க வேண்டும்.

கொசு உற்பத்தி இடங்களை அழிப்பதற்கு வாரந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் நீா் மூலம் பரவும் நோய்களின் தன்மை, நோய் பரவும் முறை பற்றி எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டும். குடிநீா் மாதிரிகளை, குளோரின் அளவு மற்றும் பாக்டீரியல் ஆய்வுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயலாற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிசாமி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் உமா, மாவட்ட மலேரியா அலுவலா் பழனிசாமி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com