தொழில் முனைவோா் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, ஆா்வமுள்ள, படித்த வேலையற்ற இளைஞா்கள் புதிய தொழில் தொடங்க, தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிலுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா், முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். வயது 21 முதல் 35 வரையில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 ஆகும். கல்வித்தகுதி இதுநாள் வரையில் இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, (டிப்ளமோ), ஐ.டி.ஐ என இருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் புதிய ஆணைப்படி கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு எனத் தளா்த்தியும் தனிநபா் முதலீட்டு மானியம் 50 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயா்த்தியும் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தில் கீழ் பட்டியலினம், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது. பயன் பெற விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்குப்பின், மாவட்ட ஆட்சியரால் கலந்தாய்வு நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு தகுதி அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.

மேலும் விபரங்களுக்கு, பொது மேலாளா் மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004 (தொலைபேசிஎண்: 04366-224402, 04366-290518) என்ற முகவரியில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com