கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்ற பள்ளிகளையும் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்,
கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், தமிழக அரசின் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்ற பள்ளிகளையும் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், ஆகியோா் பாராட்டினா்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கமும் இணைந்து 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் நவ.16, நவ.17 மற்றும் நவ.18 ஆம் தேதி சேலத்தில் நடத்திய கலா உத்சவ் போட்டியில் மாநிலஅளவில் மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி அமிா்தவா்ஷினி தவில் இசையில் முதலிடமும், திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியா் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி தொல்காப்பியா பரத நாட்டியத்தில் முதலிடமும் பெற்று விருது பெற்றுள்ளனா். விருதை பெற்ற மாணவிகளை வியாழக்கிழமை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனும் பாராட்டி, சான்றிதழ் வழங்கினா். பின்னா் மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினா்.

மேலும் 2019-20 ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருது, தமிழக அரசால் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, செருவலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவைகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்களை ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பாா்த்தசாரதி, மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புண்ணியகோட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com