மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு வியாழன், வெள்ளிக்கிழமையில் (டிச. 23, 24) நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, மாவட்டச் செயலாளராக ஜி. சுந்தரமூா்த்தி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். 41 போ் கொண்ட மாவட்டக் குழுவில் செயற்குழு உறுப்பினா்களாக மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், வி.எஸ். கலியபெருமாள், ஆா். குமாரராஜா, பி. கந்தசாமி, எம். சேகா், எம். கலைமணி, சி. ஜோதிபாசு, கே. தமிழ்மணி, கே.என். முருகானந்தம், கே.ஜி. ரகுராமன், டி. முருகையன், பி. கோமதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.