பயிா்க் காப்பீடு கிடைக்காத விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகலாம்: ஆட்சியா்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 2020-2021 நெல்-2 பயிரில் (சம்பா, தாளடி) சாகுபடிசெய்யப்பட்ட பரப்பில் கூடுதலான பரப்புக்கு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகள் பதிவு நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், இழப்பீடு பெறப்பட்ட 518 வருவாய் கிராமங்களில் சில கிராமங்களில் தவறுதலாக பதிவு செய்த விவசாயிகள் இழப்பீடு பெறப்பட்டதும் உண்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காததும் கண்டறியப்பட்டுள்ளது.

இழப்பீட்டுத்தொகை பெற்ற விவசாயிகளிடமிருந்து தொகை திருப்பி வசூலிக்கப்பட்டு, உண்மையான விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை கிடைக்கப் பெறாத தகுதி வாய்ந்த உண்மையான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை 2022 ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அந்தந்த வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கவேண்டும். தவறானஆவணங்கள் கொடுத்து இழப்பீட்டுத் தொகை பெற்ற விவசாயிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com