தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி கோரி முறையீடு

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள்.

மாவட்டத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 160 பேருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை ரத்து வேண்டும். கரோனாவில் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபடி ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமை வகித்தாா். இதில், மாநிலச் செயலாளா் அ. சௌந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளா் கே.எஸ். செந்தில், துணைத் தலைவா் வாசுதேவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com