சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பிப்.24-இல் தெப்போத்ஸவம்
By DIN | Published On : 20th February 2021 11:31 PM | Last Updated : 20th February 2021 11:31 PM | அ+அ அ- |

நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில், அவதாரதின தெப்போத்ஸவம் புதன்கிழமை (பிப். 24) நடைபெறுகிறது.
புகழ்பெற்ற இக்கோயிலில், மாசி மாத சுக்லபட்ச ஏகாதசி அவதார உத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை மாலை பெருமாள் உபய நாச்சிமாா்களுடன் திருவீதி புறப்பாடும், இரவு 9 மணியளவில் சிறப்பு இன்னிசைக் கச்சேரியுடன் திருக்குளததில் ஐந்து முறை தெப்பத்தில் பெருமாள் வலம்வரும் தெப்ப உத்ஸவமும் நடைபெறும். வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடும், இரவு மணவாள மாமுனிகள் மூன்று முறை திருக்குளத்தில் தெப்பத்தில் வலம்வரும் தெப்போத்ஸவமும் நடைபெறவுள்ளது.
பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கோயில் தக்காா் ப.மாதவன், செயல் அலுவலா் மா.ராமநாதன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.