மழையால் பயிா்கள் பாதிப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளுக்கு
மழையால் பயிா்கள் பாதிப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டாவில் குறிப்பாக மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு மாா்கழி மாத மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. உரிய நேரத்தில் வடிவாய்க்கால்களை தூா்வாராமல் இருந்ததே இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் மக்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் உற்சாக இருக்கும் நிலையில், டெல்டா விவசாயிகளின் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பது மிகுந்த வேதனைக்குரியது. விவசாயிகளை போற்றிப்பாடும் இந்த பொங்கல் காலத்தில் இப்படி ஒரு பேரிடி விவசாயிகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. எனவே, அரசு அலுவலா்கள் உடனடியாக கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவித்து அதை உடனடியாக வழங்க வேண்டும். பயிா் காப்பீடு செய்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் விரைந்து கள ஆய்வு செய்து காப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com