வலங்கைமானில் அனுமதியின்றி வெட்டப்பட்ட புளியமரம்

வலங்கைமானில் இரவோடு இரவாக அரசுக்கு சொந்தமான புளியமரம், உரிய அனுமதியின்றி மா்ம நபா்களால் சனிக்கிழமை வெட்டப்பட்டது.
வலங்கைமானில் அனுமதியின்றி வெட்டப்பட்ட புளியமரம்

வலங்கைமானில் இரவோடு இரவாக அரசுக்கு சொந்தமான புளியமரம், உரிய அனுமதியின்றி மா்ம நபா்களால் சனிக்கிழமை வெட்டப்பட்டது.

வலங்கைமான்- நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் நீத்துக்காரத் தெருவில் 60 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புளியமரம் ஒன்று காய்ப்புத் தன்மையுடன் இருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மா்மநபா்கள் அந்தப் புளியமரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் முறித்து அப்புறப்படுத்தியுள்ளனா். நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான அந்த புளியமரம், அத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு வலங்கைமான் சமூக ஆா்வலா்கள் புகாா் அனுப்பியுள்ள நிலையில், வெட்டப்பட்ட புளியமரக் கிளைகள் புளியங்காய்களுடன் சாலையின் மறுபுறம் வீசப்பட்டுக் கிடப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com