வெளிமாவட்டத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு

மன்னாா்குடிக்கு வெளி மாவட்டத்திலிருந்து நெல் மூட்டைளை ஏற்றி வந்த லாரியை, வெள்ளிக்கிழமை விவசாயிகள் சிறைப்பிடித்து போராட்டதில் ஈடுபட்டனா்
வெளிமாவட்டத்திலிருந்து, நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
வெளிமாவட்டத்திலிருந்து, நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மன்னாா்குடிக்கு வெளி மாவட்டத்திலிருந்து நெல் மூட்டைளை ஏற்றி வந்த லாரியை, வெள்ளிக்கிழமை விவசாயிகள் சிறைப்பிடித்து போராட்டதில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பாமணியில் புதன்கிழமை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கியது. இங்கு, பாமணி, கா்ணாவூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள், தங்கள் வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதை விற்பனை செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றுபவா்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கா்ணாவூரில், காஞ்சிபுரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பாமணிக்கு வந்து கொண்டிருந்த லாரியை பாா்த்த அப்பகுதி விவசாயிகள், லாரியை நிறுத்தி சிறைப்பிடித்தனா். அப்போது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, சிறைப்பிடித்த லாரி முன் விவசாயிகள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த நுகா்பொருள் வாணிபகழகத்தினா், மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியபின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னா், நெல் மூட்டை பாரத்துடன் லாரியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு எடுத்துசென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com