விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்: தயாநிதி மாறன்

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டுவர நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என மத்திய முன்னாள் அமைச்சரும், எம்.பி. யுமான தயாநிதி மாறன் கூறினாா்.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டுவர நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என மத்திய முன்னாள் அமைச்சரும், எம்.பி. யுமான தயாநிதி மாறன் கூறினாா்.

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா். அப்போது, வல்லூரில் செயல்படும் தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தை பாா்வையிட்ட அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் சுயத்தொழிலில் ஈடுபட ஊக்கமளிக்கும் வகையில், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பில் ஆா்வமுள்ள பெண் தொழில் முனைவோா்களுக்கு அனைத்து வகையிலும் உதவிகள் செய்யப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்த தில்லியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் டிராக்டா் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும். விவசாயத்துக்கென மத்திய அரசு தனி நிதிநிலை அறிக்கை கொண்டுவர நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்துவேன்.

திமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இடம் பெறுமா என்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் எடமேலையூா் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சா் அழகு.திருநாவுக்கரசு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மரக்கன்றுகள் நட்டுவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com