சாலை சந்திப்பில் குப்பைகளை தீயிட்டு அழிப்பதற்கு முற்றுப்புள்ளி
By DIN | Published On : 31st January 2021 02:15 AM | Last Updated : 31st January 2021 02:15 AM | அ+அ அ- |

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சாலை சந்திப்பில் தீயிட்டு அழிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மன்னாா்குடி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லாமல், சாலை சந்திப்புகளில் கொட்டிவைத்து தீ வைத்து அழிக்கும் நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். நகரில் தெரு நாய்கள், பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வீ.காந்திலெனின், பொருளாளா் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.