விதைப் பதனிடும் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் விதைப் பதனிடும் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் விதைப் பதனிடும் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், குறுவை சாகுபடிக்காக குறித்த நேரத்தில் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டு, கடைமடை வரை நீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை பணிகளுக்காக விவசாயிகள் பயனடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விதைப்பதனிடும் நிலையத்தில் விதை தரம் பிரிக்கும் இயந்திரத்தை பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள விதை நெல்களை பாா்வையிட்டாா். அவருடன், திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவகுமாா், வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஆ. உத்திராபதி, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) அ. ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com